காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகம் மறுப்பு
டெல்லி:
கர்நாடகத்திலும் கடும் வறட்சி நிலவி வருவதால், காவிரியில் தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கர்நாடக அரசுகைவிரித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் வாடிவரும் பயிர்கள் பிழைக்குமா என்பது சந்தேகம்தான்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து காவிரி நீர் கண்காணிப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றுபிரதமரை கேட்டுக் கொண்டிருந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதன்படி நேற்று (வியாழக்கிழமை) மாலைகாவிரி நீர் கண்காணிப்பு கூட்டம் டெல்லியில் கூடியது.
இந்த கூட்டத்திற்கு மத்திய நீர் வளத்துறை செயலாளர் பி.என். நவாலாவாலா தலைமை வகித்தார். தமிழகதலைமைச் செயலாளர் சங்கர், கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சார்யா மற்றும் கேரளா-பாண்டிச்சேரிமாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்பற்றாக்குறையால் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வாடி வருவதால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டியதன் அவசியத்தை தமிழக அதிகாரிகள் கண்காணிப்பு குழுவிடம் எடுத்துரைத்தனர்.
ஆனால், கர்நாடகாவிலும் மழை பெய்யாத காரணத்தால், அங்கும் கடும் வறட்சி நிலவி வருவதையொட்டி,காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.
கண்காணிப்பு குழு கூட்டம் முடிந்ததும், நீர்வளத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இரண்டுமாநில அதிகாரிகளும் தங்கள் மாநிலங்களில் நிலவி வரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கூறினர்.இது குறித்து பரிசீலனை செய்யப்படும். 5 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மீண்டும் கண்காணிப்புகுழு கூட்டத்தை மீண்டும் கூட்டும் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.
கர்நாடக தலைமைச் செயலாளர் தெரசா பட்டாச்சார்யா கூறும்போது:
கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. இதனால் கர்நாடகத்தில் கடுமையானவறட்சி ஏற்பட்டுள்ளது. 45 தாலுகாக்களில் கடும் வறட்சி உள்ளது.
எனவே தமிழத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருக்கிறோம். கர்நாடகம் தன்மாநிலத்தின் சொந்த விவசாயிகளின் நலனையும் பார்க்க வேண்டியுள்ளது என்றார் அவர்.
கர்நாடக அரசு தண்ணீர் விட இயலாது என்று கூறிவிட்ட காரணத்தால் தமிழகத்தில் வாடிவரும் பயிர்கள் பிழைப்பதுகடினம் என்ற நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
