மீண்டும் 61 சென்னை மீனவர்கள் கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையைச் சேர்ந்த 61 மீனவர்களை மீண்டும் ஆந்திர மீனவர்கள் கடத்திச் சென்று சிறை வைத்தனர். இவர்களில்தற்போது 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்களை ஆந்திர மாநில மீனவர்கள் மற்றும் சமூக விரோதிகள்அடிக்கடி பிடித்துச் சென்று விடுவதும், பிறகு கணிசமான தொகை கைமாறியதும் விடுவிப்பதும் அடிக்கடி நடந்துவருகின்றன.

இந்த கொடுமைக்கு எப்போது தீர்வு வரும் என்று காசிமேடு மீனவர்கள் கவலையுடன் உள்ளனர். இந்நிலையில்மீண்டும் 61 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் கடந்த கடத்திச் சென்றனர்.

ராயபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 20 விசைப் படகுகளில் கடந்த 31ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர். ஆனால் அதற்குப் பின் அவர்கள் யாரும் கரை திரும்பவில்லை. இதையடுத்து ராயபுரம் போலீஸில்மீனவர்களின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன மீனவர்கள் ஆந்திர மீனவர்களால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் குழு ஒன்று ஆந்திராவுக்கு விரைந்தது. அவர்களுடன் மீனவர் சங்கப் பிரதிநிதிகளும்சென்றனர்.

ஆனால், அவர்கள் செல்வதற்கு முன்பாகவே, ஆந்திரப் போலீசார், 39 மீனவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.அவர்கள் மட்டும் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 22 மீனவர்களும் ஒரு கிராமத்தில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கானமுயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+