சென்னையில் தொடரும் கள்ளக் காதல் கொலைகள்
சென்னை:
சென்னை நகரில் கள்ளக்காதல் காரணமாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆவடிஅருகே கள்ளக் காதலனை, இன்னொரு கள்ளக் காதலனின் உதவியுடன் கொன்ற பெண், அவரது உடலைவீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்தார்.
இந்நிலையில் முனியாண்டி சாந்தி என்ற பெண்ணைக் காதலித்தார். சாந்திக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.ஆனால் அவருடைய கணவரோ, சாந்தியைப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்தத் தம்பதிக்கு14 வயதான மேகலா என்ற பெண்ணும் ஒரு மகனும் உள்ளனர்.
சாந்தியும், முனியாண்டியும் கணவன், மனைவி போல வாழத் தொடங்கினர். சாந்தியின் குழந்தைகளும்இவர்களுடன் தங்கியிருந்தனர்.
முனியாண்டிக்கு தினசரி பலான படங்கள் பார்க்காவிட்டால் தூக்கம் வராதாம். இதனால் வீட்டிலேயே வீடியோ டெக்போட்டு தினசரி அதுபோன்ற படங்களைப் பார்ப்பாராம். அவருடன் சேர்ந்துசாந்தியும் பார்ப்பாராம்.
சாந்தி இல்லாத சமயத்தில் மேகலாவையும் படங்கள் பார்க்க கூப்பிடுவாராம். ஆனால் மேகலா மறுத்துள்ளார்.ஆனால் தொடர்ந்து மேகலாவை முனியாண்டி வற்புறுத்தி வந்துள்ளார். நாளுக்கு நாள் முனியாண்டியின்அட்டகாசம் அதிகரிக்கவே அவரது செயல் குறித்து சாந்தியிடம் கூறியுள்ளார் மேகலா.
இதனால் சாந்தி ஆத்திரமடைந்தார். "காமத்தில் மகள் போன்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயல்கிறீர்களே, இதுநியாயமா?" என்று கேட்டு முனியாண்டியுடன் சண்டை போட்டுள்ளார். ஆனால் முனியாண்டி இதைக்கண்டுகொள்ளவே இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த சாந்தி, தனது பழைய காதலன் சேதுராமன் என்பரிடம் முனியாண்டி குறித்துக்கூறியுள்ளார். உடனே, முனியாண்டியைக் கொன்று விடலாம் என்று சேதுராமன் கூறியுள்ளார்.
இதையடுத்து சேதுராமனும் அவரது நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சாந்தி வீட்டுக்குச் சென்றனர். அங்கிருந்தசாந்தியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, முனியாண்டியை அடித்துக் கொன்றனர். பின்னர் பிணத்தைவீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டனர்.
சில நாட்கள் கழிந்த நிலையில், தங்களது அண்ணன் முனியாண்டியைக் காணவில்லை என்று அவரது சகோதரர்கள்போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸார் சாந்தியை விசாரித்தபோது, தனது கணவர் வெளியூர்சென்றதாகவும், இன்னும் திரும்பி வரவில்லை என்றும் கூறினார்.
ஆனால் போலீஸார் "வழக்கமான பாணி"யில் விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது. கொலை செய்ததை அவர்ஒப்புக் கொண்டார். தற்போது சாந்தி, சேதுராமன் அவரது நண்பர்கள் ரமேஷ், நந்து ஆகியோர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications