ஜெ. அப்பீல் மீதான விசாரணைக்கு புது நீதிபதி - உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
டான்சி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த ஜெயலலிதாவின் 3 மேல் முறையீட்டு மனுக்களைவிசாரித்து வரும் நீதிபதி பாலசுப்பிரமணியத்துக்குப் பதிலாக வேறு ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றுஇன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுக்களில் மீதான விசாரணை கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. ஆனால், இவ்வழக்கின் சிறப்புவழக்கறிஞர் வெங்கடபதி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து, ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் பரூச்சா, பிரஜேஸ்குமார் மற்றும் அசோக் பான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதாவின் 3 மேல் முறையீட்டு மனுக்கள், ஏற்கனவே இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிக்குப் பதிலாகவேறு ஒரு நீதிபதிக்கு மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தப் புது நீதிபதி யார் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள நீதிபதி முடிவு செய்வார் என்றும்நீதிபதிகள் பெஞ்ச் கூறியது.
இந்த 3 மனுக்கள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், அடுத்த ஒரு வாரத்திற்குள் வழக்கறிஞர்வெங்கடபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஜெயலலிதாவின் இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு முன்நடைபெறக் கூடாது என்றும் இந்த நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
"எம்.எல்.ஏவாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேதி நெருங்கி வருவதால், விசாரணையை இன்னும்முன்னதாக ஆரம்பிப்பதற்கு உத்தரவிட வேண்டும்" என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வேணுகோபால்நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு நீதிபதிகள், "அதெல்லாம் எங்களுக்குப் புரிகிறது. அதற்காக கோர்ட் நீதி வழங்காமல் போகாது" என்று கூறி,அவருடைய வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications