திருமண வீட்டில் விஷச்சாராயம் அருந்திய 6 பேர் பலி
சென்னை:
சென்னை அம்பத்தூர் அருகே திருமண வீட்டில் விஷச் சாராயம் அருந்திய 6 பேர் இறந்தனர்.
திருமணத்திற்குப் பிறகு, மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த சிலர் கும்மிடிப்பூண்டியிலிருந்து சாராயம் வாங்கி வந்தனர்.நள்ளிரவுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் கும்பலாக அமர்ந்து சாராயம் குடிக்கத் தொடங்கினர்.
குடிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் அவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். பின்னர் மயங்கி விழுந்து விட்டனர். இதில்ரவி என்பவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
மாசிலாமணி, இன்னொரு மாசிலாமணி மற்றும் டில்லி உள்பட 10 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தனர். மேலும் 5 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் கள்ளச்சாராயம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. இதைத் தடுக்க போலீஸார் சமீபகாலமாக தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த வாரம் நடந்த சாராய வேட்டையில்கூட, 300-க்கும்மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் தொடர்ந்து கள்ளச்சாராயம் தாராளமாக புழங்கி வந்தது. தற்போது அது 6 பேரின் உயிரைப் பறித்துவிட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications