அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக மீது ஜெ. தாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி நீர் கிடைக்காமல் போனதற்குமுந்தைய திமுக ஆட்சிதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
கடந்த திமுக ஆட்சியின் போது 4 மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகக் கொண்ட காவிரி நதி நீர் ஆணையம்அமைக்கப்பட்டது.
இந்த விஷயத்தில், அதிகாரமே இல்லாத முதலமைச்சர்களை உறுப்பினர்களாக நியமிப்பதை விட, அதிகாரம்வாய்ந்த அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று நான் அப்போது எதிர்ப்புத் தெரிவித்தேன்.
அதற்கு செவிசாய்க்க திமுக அரசு மறுத்துவிட்டது. அதிகாரிகளைத்தான் உறுப்பினர்களாக்க வேண்டும் என்றுமத்திய அரசிடம் அப்போதே திமுக அரசு குரல் கொடுத்திருந்ததால், கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்கு காவிரித்ண்ணீர் பெறுவதில் இந்த அளவுக்கு சிக்கல்கள் இருந்திருக்காது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.












Click it and Unblock the Notifications