இன்று கூடுகிறது புதிய நீதிக்கட்சியின் செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது, அதற்கு ஆயத்தமாவது குறித்து விவாதிக்க புதியநீதிக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து கட்சியின் 2வது ஆண்டு தொடக்க விழாவும், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தின விழாவும்நடைபெற உள்ளது.
அப்போது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் போது புதிய நீதிக்கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்விவாதிக்கப்படும்.
வரும் 15ம் தேதி புதியநீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் சென்னை தீவுத்திடலிலிந்து புதியநீதிக்கட்சியின் ஊர்வலம் புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
அதே தினம் பிற்பகல் மாலை புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில்நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications