ரோட்டில் சென்றவரை அடித்துக் கொன்ற மன நோயாளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் சாலையில் நடந்து சென்றவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை செய்தார்.

சைதாப்பேட்டை பகுதியில் ஒருவர் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப்பின்னால் ஒரு இளைஞர் கையில் தடியுடன் வந்து கொண்டிருந்தார்.

அந்த இளைஞர், திடீரென தனக்கு முன்னால் சென்ற நபரின் தலையில் கையில் வைத்திருந்த தடியால் ஓங்கிஅடித்தார். தொடர்ந்து பலமுறை அவர் அடித்ததால், அந்த நபர் தலையில் பலத்த அடிபட்டு, அங்கேயே இறந்துவிட்டார்.

போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் திடீரென நடந்து விட்ட அந்தச் சம்பவத்தால்,அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் விட்டனர். பின்னர் சுதாரித்துக் கொண்டு தடியால்அடித்தவரைப் பிடித்து சைதாப்பேட்டை போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையின்போது, அந்த நபர் சுப்ரமணி என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் ஒழுங்காகபேசவில்லை. திடீரென சிரிக்கிறார். எனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+