முதல்வராக தொடரலாமா?: இன்று ஜெ. வழக்கறிஞர் இறுதி வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தை எடுத்துக் கூற இருக்கிறார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ரஜி தனது வாதத்தை கடந்தபுதன்கிழமை முடித்துக் கொண்டார். ஜெயலலிதா முதல்வராக தொடர்வதை ரத்து செய்தால் அவரதுஅமைச்சரவையை என்ன செய்வது என்ற நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு இன்று சோரப்ஜி பதில் தருவார்.

மக்கள் தீர்ப்பை ஏற்றுத் தான் ஜெயலலிதாவை அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக்கினார் எனஏற்கனவே ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.

ஆனால், மக்கள் தீர்ப்பை விட நாட்டின் அரசியல் சட்டம் அதிமுக்கியமானது, மக்கள் தீர்ப்பளித்துவிட்டார்கள்என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அதே போல ஜெயலலிதாவை பதவியை விட்டு நீக்கினால் அவரது அமைச்சரவையை என்ன செய்வது, இடைக்காலமுதல்வராக யாரை நியமிப்பது என்பது போன்ற கேள்விகளை அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.

இந்நிலையில், டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் அப்பீல் மனுக்களை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றநீதிபதியை மாற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்குஎதிராக வாதாடி வரும் அரசுத் தரப்பு வழக்கறிஞரான வெங்கடபதி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதியைஉச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.

வழக்கில் தனக்கு போதிய ஆவணங்களையும் வாதாட போதிய நேரத்தையும் தர நீதிபதி பாலசுப்பிரமணியம்மறுப்பதாகவும், இதனால் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் வெங்கடபதிகோரியிருந்தார்.

ஆனால், நீதிமன்றத்தை மாற்ற வேண்டியதில்லை, நீதிபதியை மட்டும் மாற்றலாம் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.மேலும் அக்டோபர் 1ம் தேதிக்குப் பின்னர் தான் இந்த வழக்கு விசாரணையை புதிய நீதிபதி தொடங்கலாம் எனவும்உத்தரவிட்டுவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி புதன்கிழமை (நாளை)பதவியேற்கிறார். அவர் தான் ஜெயலலிதாவின் வழக்குக்கு புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைகளால் டான்சி வழக்கை விரைவில் முடித்து எப்படியாவதுவிடுதலையாகிவிட நினைத்த ஜெயலலிதாவின் திட்டங்கள் தவிடுபொடியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+