அமெரிக்காவிடம் சிக்குகிறது பாகிஸ்தான்
வாஷிங்டன்:
விமானக் கடத்தல் மற்றும் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஆதரிக்கும் மிக முக்கிய நாடு பாகிஸ்தான் தான். ஒசாமா பின் லேடன் பலமுறைபாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் ஒசாமாவுக்கும் தலிபான்ஆட்சியாளர்களுக்கும் இடையே நல்ல உறவு நிலவி வருகிறது.
எனவே, இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு முன்பே தெரியாமல் இருந்திருக்க முடியாது எனஅமெரிக்கா நம்புகிறது.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்ற அன்பானஅமெரிக்க வேண்டுகோள் பாகிஸ்தானை அச்சத்தில் தள்ளியுள்ளது.
பாகிஸ்தானுக்குத் தெரியாமல் இத் தாக்குதல் நடந்திருக்க முடியாது என்பதைத் தான் மறைமுகமாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை உயர் ராணுவ அதிகாரிகளுடன் தனது இல்லத்தில் அவசரக் கூட்டத்தை நடத்தினார் அந் நாட்டுராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப். கூட்டத்துக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தீவிரவாதத்தை பாகிஸ்தான் அடியோடு வெறுக்கிறது. தீவிரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது எனக்கூறியுள்ளார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் தான் உரம் போட்டு இஸ்லாமிய தீவிரவாத்தைத் வளர்த்து வருகின்றன என்பதுஉலகறிந்த உண்மை. அமெரிக்காவின் கோபத்தில் இருந்து தப்புவதற்காக தீவிரவாதத்தை வெறுப்பதாக பர்வேஸ் முஷாரப் அவசரஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிடம் வசமாக சிக்குகிறது பாகிஸ்தான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications