காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முடிவு?
பெங்களூர்:
மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு முடிவுசெய்திருப்பதாகக் கூறப்டுகிறது.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஆகியோரிடமும் இந்தக்குழு முறையிட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை கர்நாடகத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மனிதாபிமானஅடிப்படையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக, கர்நாடக அரசு வட்டாரங்கள்தெரிவித்தன.
தமிழகத்தில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா பயிரிடும்போதும், கர்நாடகத்தில் மழை பெய்யவில்லை என்றால்,அதற்குப் பிறகு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் கர்நாடகம் உறுதியாகத் தீர்மானித்துள்ளது என்றும்கூறப்படுகிறது.
மேலும், கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினரும், பிரதமரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படிகேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி பிரதமரைச் சந்தித்த பிறகு, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!