இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
கொழும்பு:
இலங்கையில் சந்திரிகா தலைமையில் 20 துணை அமைச்சர்களையும், 19 கேபினட் அமைச்சர்களையும் கொண்டபுதிய அமைச்சரவை இன்று (வெள்ளிகிழமை) பதவியேற்றது.
ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிகா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் சந்திரிகா அரசுபெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் சந்திரிகா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்தன.
தன் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை 2 மாத காலத்திற்கு ஓத்தி வைத்தார் சந்திரிகா. இதுநடந்தது கடந்த ஜுலை மாதம்.
இந்நிலையில் ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் (ஜே.வி.பி.) சந்திரிகாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அவர்கள்விதித்த பல நிபந்தனைகளையும் அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சந்திரிகா அரசுக்கு 1 வருடம் காலம்ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவித்தது.
ஜே.வி.பி. வசம் 10 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவால் சந்கதிரிகா அரசு மீண்டும் பெரும்பான்மைபெற்றுள்ளது. இதனால் சந்திரிகா அரசு பிழைத்தது.
ஜே.வி.பி. விடுத்த நிபந்தனையில் ஒன்று கேபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 40லிருந்து 20ஆக குறைக்கவேண்டும். இதை சந்திரிகா ஏற்றுக் கொண்டார்.
இதனடிப்படையில் புதிய கேபினட் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர். 19 கேபினட் அமைச்சர்களும்,அவர்களுக்கு உதவும் வகையில் 20 துணை அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்திரிகா முன்பு தன் வசம் இருந்த நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை யாருக்கும் மாற்றாமல் தன் வசமேவைத்துக் கொண்டுள்ளார்.
ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரிகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவியாழக்கிழமை மந்திரி சபையிலிருந்து விலகிய 4 அமைச்சர்களைத் தவிர மற்ற மூத்த அமைச்சர்கள்அனைவருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
பதவி இழந்த அமைச்சர்களில் ஆறுமுகம் தொண்டமான் குறிப்பிடத்தக்கவர். மக்கள் கூட்டணியைச் சேர்ந்தமுக்கியமானவர்களுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு, அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்சந்திரிகா.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications