சென்னையில் காலிப் பானைகளுடன் வைகோ ஊர்வலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் அல்லது அதிமுக அரசு பதவி விலகவேண்டும் என்று கோரி வைகோ தலைமையில் மதிமுகவினர் ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் சேப்பாக்கம்வரைசென்றது. ஊர்வலத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

ஊர்வலத்தில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். போர்க்கால அடிப்படையில்குடிநீர்ப்பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் அல்லது அதிமுக அரசு உடனே பதவிவிலக வேண்டும் என்றுஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷம் எழுப்பினர்.

ஊர்வலத்தின் முடிவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த வைகோ கூறியதாவது:

சென்னையில் பலமாதங்களாக நிலவிவரும் குடிநீர்ப்பிரச்சனைகளைத் தீர்க்க அதிமுக அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும். கடந்த கால திமுக அரசும் இந்தப்பிரச்சனையைத் தீர்க்கத் தவறிவிட்டது.தண்ணீர்ப்பிரச்சனையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் அதிமுக அரசு முயலவில்லை.

இதனால் பொதுமக்கள் படும் அவதிகளை அரசுக்குச் சுட்டிக்காட்டத்தான் இந்த ஊர்வலத்தை மதிமுக நடத்துகிறது.உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுவாங்க வேண்டும் என்பதற்காக அல்ல.

பொதுமக்கள் பல மாதங்களாகப் பொறுமை காத்துவருகிறார்கள். அவர்கள் பொறுமையின் எல்லையை மீறினால்எரிமலையே வெடிக்கும்.

எனவே குடிநீர்ப்பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால் அதிமுக அரசு உடனடியாகப் பதவியிலிருந்துவிலகவேண்டும்.

மேலும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்பது பற்றிப் பேச்சுவார்த்தைநடத்திவருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தின் முடிவில் அமெரிக்காவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியானவர்களுக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற