தலிபான் ராணுவத்தை தயார்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா திடுக் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், உளவுப் படையினரும், பாராசூட் படையினரும் இன்னும்தங்கியுள்ளனர் என அமெரிக்காவிடம் இந்தியா கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆட்சியில் அமர்த்திய பாகிஸ்தான் தான் அவர்களுக்கு ராணுவ உதவிகளையும்,நிதியுதவியையும் அளித்து வருகிறது.

பாகிஸ்தானின் பல ராணுவப் படைகள், பாராசூட் வீரர்கள், ஐ.எஸ்.எஸ். உளவுப் பிரிவினர், சிறப்பு பாதுகாப்புப் படையினர்,கமாண்டோக்கள் ஆகியோர் ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்து நிலை கொண்டுள்ளனர். இவர்கள் தலிபான்களுடன் சேர்ந்துஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது அமெரிக்காவுக்கு உதவுவதாக ஒரு பக்கம் கூறிக் கொண்டு சமாதான முயற்சிகளில் இறங்கியிருந்தாலும் தனதுபடையினரை பாகிஸ்தான் இன்னும் ஆப்கானிஸ்தானுக்குள் வைத்துள்ளது என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இவர்களைத் தவிர பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற சிபா-ஏ-சகாபா, ஹர்க்கத்துல் முஜாகிதீன், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் உள்ளிட்டதீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த நூற்ருக்கணக்கானவர்களும் பாகிஸ்தானின் இந்த தளங்களில் தான் தங்கியுள்ளனர்.

இந்த தகவல்களை இந்தியாவின் ரா உளவுப் பிரிவும் இன்டலிஜென்ஸ் பீரோவும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளிடம்வழங்கியுள்ளன.

பெஷாவரைத் தலைமையிடமாகக் கொண்ட பாகிஸ்தான் ராணுவத்தின் துணை யூனிட் காபூலில் நிறுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் சேரட் பகுதியை தலைமையிடமாகக் கொண்ட சிறப்புப் பாதுகாப்புப் படையின் முதல் பட்டாலியன்ஆப்கானிஸ்தானில் தான் உள்ளது என்ற தகவலையும் அமெரிக்காவிடம் இந்தியா தந்துள்ளது.

அதே போல பாகிஸ்தானின் பாராசூட் ரெஜிமண்டைச் சேர்ந்த ஒரு பிரிவு தலிபான்களின் நங்கார்கர் டிவிஷனைக் கட்டுப்படுத்திவருகிறது.

நங்கார்கரில் உள்ள தலிபான் ஆர்டிலரி பிரிவின் கட்டடத்தில் தான் பாகிஸ்தானின் கமாண்டோ துணை யூனிட் படையினர்தங்கியுள்ளனர் என்றும் இந்தியா உளவுப் பிரிவு கூறியுள்ளது.

இந்தத் தகவல்கள் எல்லாமே அமெரிக்க ராணுவத்திடமும் சி.ஐ.ஏயிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளன. தலிபான் ராணுவத்தைஇயக்குவதே பாகிஸ்தான் தான் என்று இந்தியா மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.

தலிபான்களின் பங்க்ராம் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நிலை கொண்டுள்ளனர். காண்டஹார்மற்றும் காபூலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் படை இரு புதிய அலுவலகங்களைத் திறந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கத்தாக்குதலை எதிர்கொள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமான உதவிகளை வழங்க முடியும்.

காண்டஹாரில் உள்ள ஐ.எஸ்.ஐ. அலுவலகத்துக்கு பாகிஸ்தானின் மேஜர் நிலையில் உள்ள ராணுவ அதிகாரியும் காபூல்அலுவலகத்துக்கு பிரிகேடியர் நிலையில் உள்ள அதிகாரியும் தலைமை தாங்கியுள்ளனர்.

அதே போல உஸ்பெகிஸ்தானில் உள்ள தலிபான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு உதவ மஷார்-ஏ-ஷெரீபிலும் ஒரு அலுவலகத்தைஐ.எஸ்.ஐ. திறந்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கு பிராந்தியத்தில் உள்ள மன்ஷெரா, லாக்கி, நெளஷரா, சார்சத்தா ஆகியஇடங்களில் உள்ள மூடப்பட்ட ரசாயன தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள், ஜவுளி மில்கள் ஆகியவற்றை பாகிஸ்தான்ராணுவமும் ஐ.எஸ்.ஐயும் இணைந்து ஆயுதக் கிடங்குகளாக மாற்றி வருகின்றன.

இங்கு சேகரிக்கப்படும் பாகிஸ்தான் ஆயுதங்கள் போர் தொடங்கியவுடன் தலிபான்களுக்கு அனுப்பப்படும்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜமாத்-ஏ-இஸ்லாமியைச் சேர்ந்த 2,000 தீவிரவாதிகளும் தலிபான்களுடன் போராடுவதற்காகதக்கார் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ. தான் பயிற்சி அளித்தது.

வெளியுலகுக்கு உணவு லாரிகள் போலத் தெரியும் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் லாரிகளில் ஆயுதங்கள்,விமான எரிபொருள், உயவுப் பொருள்கள் (லூப்ரிகண்ட்ஸ்) ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன.

வெளியில் அமெரிக்காவுக்கு ஆதரவு பின் லேடனை ஒப்படைக்கச் செய்ய தலிபான்களுடன் பேச்சுவார்த்தை என்றெல்லாம்காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் மிக மிக ரகசியமாக தலிான்களை போருக்குத் தயார்படுத்தி வருகிறது. பாகிஸ்தானைத்தாக்குவோம் என்ற தலிபான்களினி மிரட்டல் கூட உலகை முட்டாளாக்குவதற்காகத் தான் என இந்தியா கூறியுள்ளது.

பணமோ, வறட்சி காரணமாக உணவோ இல்லாத தலிபான்கள் இத்தனை நாள் ஆட்சியிலேயே இருந்திருக்கவே முடியாது.அவர்களை ஆட்சியில் வைத்திருப்பதே பாகிஸ்தான் ராணுவமும் பின் லேடனுன் பணமும் தான் என இந்தியா கூறுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற