ஆப்கானிஸ்தான் மத குருமார்கள் கூட்டம் தொடங்கியது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானின் மத குருமார்களான உலமாக்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து இவர்கள் தான் முடிவு செய்வார்கள் என தலிபான்கள்கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் அனைத்து உலமாக்களும் காபூல் வந்து சேரவில்லை.ஆனாலும் கூட்டத்தை தலிபான்கள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

நேற்று நடப்பதாக இருந்த இந்தக் கூட்டம் பெரும்பான்மையான உலமாக்கள் காபூல் வந்து சேராததால் ஒத்திவைக்கப்பட்டது. எலலா மத குருமார்களும் காபூல் வந்து சேர மூன்று நாட்கள் ஆகும். அதன் பின்னர் தான் கூட்டம்நடக்கும் என தலிபான்கள் அறிவித்தனர்.

ஆனால், 3 நாட்கள் எல்லாம் பொறுத்திருக்க முடியாது என பாகிஸ்தான் மூலமாக தலிபான்களிடம் அமெரிக்காகடுமையாகக் கூறிவிட்டது. இதையடுத்து பாதியளவு மதகுருமார்கள் தான் காபூல் வந்துள்ள நிலையில் அவர்களின்கூட்டத்தை தலிபான்கள் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கூட்டமே கூட 2 முதல் 3 நாட்கள் வரை நடக்கும் என்று தெரிகிறது. இவர்கள் எடுக்கும் முடிவை ஏற்போம்என தலிபான்கள் கூறியுள்ளனர்.

தங்கள் நாட்டில் விருந்தினராக உள்ள பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க விட மாட்டோம் என்று தான்பெரும்பான்மையான உலமாக்கள் கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவில் நடந்த விமானத் தாக்குதலுக்கு லேடன்தான் காரணம் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தைத் தந்தால் மட்டுமே அவரை ஒப்படைக்கலாம் என மற்றஉலமாக்கள் கூறுகின்றனர்.

இந்த மத குருமார்கள் வழங்கும் பத்வாவை (மத உத்தரவு) நிறைவேற்றுவோம் என தலிபான்கள் கூறியுள்ளனர்.முன்னதாக பின்லேடனை ஒப்படைக்க சில நிபந்தனைகளை தலிபான்கள் விதித்தனர். இந்த நிபந்தனைகளைஅமெரிக்கா ஏற்றாலும் கூட மத குருமார்கள் எடுக்கும் முடிவைத் தான் நிறைவேற்றுவோம் என்றும் தலிபான்கள்கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீதும், அதற்கு உதவும் பாகிஸ்தானுக்கும்எதிராக ஜிகாத் (மதப் போர்) தொடுக்க மத குருமார்கள்உத்தரவிடுவார்கள் என்று தான் பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களும் பல நாட்டு புலனாய்வுஅமைப்புகளும் எதிர் பார்க்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற