3வது உலகப் போர் வரலாம்: கருணாநிதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆப்கானிஸஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் அதன் விளைவு 3வது உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. தீமைகள் என கருதப்படும் செயல்களைதீவிரவாதத்தால் நீக்க முடியாது. இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சி செய்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இதை செயல்படுத்தவும்வேண்டும்.

அமெரிக்காவின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கொடுமையானது. இதைமனித நேயம் உள்ள யாரும் ஏற்க முடியாது.

ஒசாமா பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வரவேண்டும்என்று அமெரிக்க மக்கள் விரும்புவதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.

இது பின் லேடன் என்ற தனி மனிதன் மீதான தாக்குதல் என்றால் அது உலக போருக்குவழி வகுக்காது. ஆனால் பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்திருக்கும் ஆப்கன் மீதானபோர் என்றால் அது உலக போருக்கு வழி வகுக்கும்.

ஆப்கன் மீது போர் என்றால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும்பலியாவார்கள்.

ஆப்கன் போருக்கு தயாராகி வருகிறது, பாகிஸ்தான் தலைநகரை அழிக்கதலிபன் வீரர்கள் தயார், ஆப்கனுக்கு உதவுமாறு முஸ்லிம் நாடுகளுக்கு தலிபன்அரசு கோரிக்கை, இந்திய எல்வையிலும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது என்றுசெய்தித் தாள்களில் வரும் செய்திகள் வருத்தத்தை உண்டாக்குகிறது.

நாம் தொலைவில் இருக்கிறோம் என்று நிம்மதியாகவும் இருக்க முடியாது.விஞ்ஞான உலகில் தீமைகள் அதிகமாகி உள்ளன.

இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க மத்திய அரசு தக்க நடவடிக்கைஎடுத்துள்ளது. வெளி நாட்டு கொள்கையில், அந்த அணுகுமுறையில் மத்தியில் உள்ள தலைவர்கள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது.

இதற்கு பலம் சேர்க்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நாடு முழுதும்கடைபிடிக்கப்பட்ட சூளுரை ஏற்கும் நாளும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற