தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

Panneerselvamதமிழகத்தில் புதிய முதல்வராக பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏவான ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்இரவோடு இரவாக ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர்.தேவர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் ஓட்டக்காரத் தேவர்

இவர் பெரியகுளம் தொகுதி எம்.பியும் சசிகலாவின் அக்காள் மகனுமான டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளர். சசிகலாகுடும்பத்துக்கும் மிகவும் வேண்டியவர்.

வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்த ஜெயலலிதா மாலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார். முன்னதாகஅமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

மாலையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வத்தை முதல்வராக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். இதைஅனைத்து எம்.எல்.ஏக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதா பேட்டி:

எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பின் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், பன்னீர்செல்வத்தை அனைத்துஎம்.எல்.ஏக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன். இதையடுத்துஅதிமுக அரசு சுமூகமாக நடைபெறும். எம்.ஜி.ஆர். ஆட்சி தொடர்ந்து சிறப்புடன் நடக்கும்.

அனைத்து அமைச்சர்களும் மீண்டும் பதவியேற்பார்கள். அவர்கள் அதே பதவிகளில் மீண்டும் தொடர்வார்கள்.ஒரே ஒரு அமைச்சர் மட்டும் புதிதாக சேர்க்கப்படுவார். நான் இந்த ஆட்சியில் தலையிட மாட்டேன்.

இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான். விரைவிலேயே மீண்டும் நானே முதல்வராகப் பொறுபேற்பேன் என்றார் ஜெயலலிதா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற