சென்னை:
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்குகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டுமனுக்களை விசாரிக்க நீதிபதி என். தினகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் எதிரொலியாக, இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி மாற்றப்பட வேண்டும் என்றுநீதிபதி பரூச்சா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் கடந்த 7ம் தேதி தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியே இவ்வழக்கிற்கான புதிய நீதிபதியை நியமிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டது.
அந்த வகையில், ஏற்கனவே இந்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிபாலசுப்பிரமணியத்திற்குப் பதிலாக, நீதிபதி தினகர் விசாரிப்பார் என்று சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமைநீதிபதி சுபாஷண் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மேல் முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு முன் நடத்தக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனால், அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு, நீதிபதி தினகர் இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பார்.
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனை காரணமாகத்தான் ஜெயலலிதாவால்,கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது என்பதும், அவர் தற்போது வகித்து வரும் முதல்வர்பதவியை விரைவில் ராஜினாமா செய்யப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!