முதல்வரான விவசாயி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எளிய குணம் கொண்ட,நல்ல மனிதர். பெரியகுளம் சட்டசபைத் தொகுதியிலிருந்து முதல் முறாையகசட்டசபைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். இவர் குறித்த சில தகவல்கள் . ..

  • 1996ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படுதோல்வி கண்டது. ஜெயலலிதாவே தோற்றார். ஆனால் சட்டசபைத் தேர்தலுடன் நடந்த நகராட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றார். அத்தோடு மட்டுமல்லாது, தென் மாவட்டங்களிலேயே வெற்றி பெற்ற ஒரே அ.தி.மு.ககாரர் அவர்மட்டும்தான்.
  • விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த, எளிய குணம் படைத்த பன்னீர் செல்வம், இளகிய மனம் படைத்தவர். கட்சி பாகுபாடின்றி எல்லோரிடமும் இனிமையாக பேசக் கூடியவர். யாரையும் கடிந்து பேச மாட்டார். சிரித்த முகத்துடனேயே எப்போதும் இருப்பார்.
  • தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவியில் அமர்வது இதுவே முதல் முறையாகும்.
  • ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா பெரிய குளம் நகராட்சியில் கவுன்சிலராக உள்ளனர்.
  • நகராட்சித் தலைவராக இருந்தபோது பன்னீர்செல்வம் பெரிய குளம் பகுதியில் ஏாளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதைக் கூறியே அவர் வாக்கும் சேகரித்தார்.
  • பெரிய குளம் தொகுதியில் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜமாத் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அபுதாஹிரை 17937 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பன்னீர் செல்வம்.
  • எந்தவித சினிமாத்துறைத் தொடர்பும் இல்லாத ஒருவர் கடைசியாக முதல்வரானது பக்தவச்சலம்தான். அதற்குப் பிறகு இப்போதுதான் ஒருவர் சினிமா சம்பந்தம் இல்லாமல் முதல்வராகியுள்ளார்.
  • முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளீர்கள் என்று ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வத்தைக் கூப்பிட்டுக் கூறியபோது அவர் அதிர்ந்துவிட்டாராம். தயவு செய்து வேண்டாம் என்று கண்களில் நீர் தளும்ப மறுத்தாராம். ஆனால் மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள், நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி ஜெயலலிதா அவரை சம்மதிக்க வைத்தாராம். அப்போதும் கூட, உங்களைப் பொறுத்தவரை நான் வருவாய்த்துறை அமைச்சர்தான் அம்மா. என்னைப் பொருத்தவரை நீங்கள்தான் முதல்வர். உங்கள் வழிகாட்டுதலின்படிதான் நடப்பேன் என்று உருக்கமாக கூறினாராம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற