கண்ணீரும் கம்பலையுமாக ... பன்னீர் பதவியேற்பு காட்சிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

  • தல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள அழைக்கப்பட்டபோதும், பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக் கொள்ள ஓ.பன்னீர் செல்வம் தவறவில்லை. முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஆளுநருக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் ஓ.பன்னீர் செல்வம் அமரவில்லை. மாறாக, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவுக்கு அருகே இருக்கையைப் போடச் சொல்லி அங்கேயே அமர்ந்து கொண்டார்.
  • ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பல மூத்த அமைச்சர்கள் இருக்கமான முகத்துடன் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்களில் ஒருவரை எடுப்பதை விட்டு விட்டு அனுபவமே இல்லாத ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தது அவர்களுக்கு அதிருப்தியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • பெண் அமைச்சர்களான ஆர்.சரோஜா, பா.வளர்மதி, வளர்மதி ஜெபராஜ் ஆகிய 3 பேரும் கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டனர்.
  • இவர்களில் சரோஜா வாய் விட்டு அழுதவாறு காணப்பட்டார். நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க முடியும் என்று மூன்று பேரும் ஜெயலலிதாவிடம் கேட்டு அழுதனர். அவர்களை ஜெயலலிதா கையசைத்து சமாதானப்படுத்தினார்.
  • முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றாலும் கூட அவருக்கு, சக அமைச்சர்கள் வணக்கம் கூறியோ, வாழ்த்துக் கூறியோ எதுவும் பேசவில்லை.
  • அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள். பன்னீர்செல்வமும் அதை எதிர்பார்த்தது போல தெரியவில்லை.
  • பதவிப்பிரமாண நிகழ்ச்சி முடியும் வரையிலும் சோகமான முகத்துடன் காணப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற