எதிர் கூட்டணி படையிடம் தலைநகரை இழக்கப் போகும் தலிபான்கள்
பாஞ்ச்ஷேர் பள்ளத்தாக்கு (வடக்கு ஆப்கானிஸ்தான்):
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் இருந்து கொண்டு தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் எதிர் கூட்டணிப்படையினர் தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர்.
வழக்கமாக தங்களுக்கு உதவி புரியும் பாகிஸ்தான் கைவிட்டுவிட்டு நிலையில் அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள படைகளை நாடு முழுவதும் அனுப்பிவிட்டது தலிபான். இதனால் தலைநகர் காபூலில் பாதுகாப்பு குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு எதிர் கூட்டணிப் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காபூல் அருகில் உள்ள 3 முக்கிய போஸ்ட்களையும் இந்தப் படையினர் கைப்பற்றிவிட்டனர்.
இதையடுத்து தலிபான்களும் அங்கு படைகளைக் குவித்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்கா மட்டும் உதவினால் சில வாரங்களிலேயே தலைநகர் காபூலைப் பிடித்துவிடுவோம் என இந்தப்படையினர் கூறுகின்றனர். இவர்களுடன் அமெரிக்காவும் பேசி வருகிறது.
இந்த எதிர்ப் படையில் உஸ்பெக் மற்றும் தஜிக் இனத்தவர்கள் உள்ளனர். தலிபான்கள் புஷ்தூன் இனத்தைச்சேர்ந்தவர்கள். இந்த இனத்தினர் இடையே எப்போதுமே நல்லுறவு இருந்தது இல்லை.
எதிர்ப் படையினருக்கு அகமத் ஷா மசூத் தலைமை வகித்து வந்தார். அவரை அமெரிக்கா மீது தாக்குதல்நடத்துவதற்கு 2 நாட்களுக்கு முன் பின் லேடனின் ஆட்கள் கொன்றனர். அரேபிய நிருபர்கள் போல சென்றஅவர்கள் வெடிகுண்டுகளை இயக்கி மசூதையும் கொன்றுவிட்டு தாங்களும் மாண்டனர்.
இதனால் இந்தப் படையின் நம்பர் டூவாக இருந்த முகம்மத் பகிம் தான் இப்போது படையை தலைமை தாங்கிநடத்தி வருகிறார். இந்தப் படையைத் தான் ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக ஐக்கிய நாடுகள் சபையால்
அங்கீகரிக்கப்பட்ட புர்ஹானுதீன் ரப்பானியும் ஆதரிக்கிறார்.
ரப்பானிக்கு இந்தியா அடைக்கலம் கூட கொடுத்தது. இந்தப் படையை இந்தியாவும் ஆதரித்து வருகிறது. இந்தப்படையினரும் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படைக்கு ரஷ்யா,ஈரான் ஆகிய நாடுகள் ஆயுதங்களையும் நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தலிபான்கள் கடத்தியதில் இருந்து இந்தப் படையினருக்கு இந்தியாவும்மறைமுகமாக உதவி வழங்க ஆரம்பித்தது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தும் முன்பே உள்நாட்டில் இருந்தே கடும் தாக்குதலை எதிர் கொண்டுள்ளது தலிபான்படை.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!