ஊர்வலத்தில் மயங்கி விழுந்த அமைச்சர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

மத்திய அரசைக் கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட செய்தி மற்றும் விளம்பரத்துறைஅமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலக மத்திய அரசும் திமுகவும் தான் காரணம் எனக் கூறி இதைக்கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராடங்கள் நடந்து வருகின்றன. பெரும்பாலானபோராடங்கள் அமைச்சர்கள் தலைமையில் தான் நடந்து வருகின்றன.

காஞ்சிபுரம் அருகேயும் திங்கள்கிழமை கண்டன ஊர்வலம் நடந்தது. இதற்கு அமைச்சர் திருநாவுக்கரசு தலைமைதாங்கினார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நடந்து வர திறந்த ஜீப்பில் அமைச்சர் வந்தார்.

ஊர்வலம் போய்க் கொண்டிருந்தபோதே அமைச்சர் திடீரென சரிந்து விழுந்தார். மயக்கமடைந்தார்.மூச்சுவிடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஈ.சி.ஜி., எக்ஸ்ரேஆகிய சோதனைகள் செய்யப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சாப்பிடாமல் அவர் வந்ததாகத் தெரிகிறது. இதனால் தான் அவர் மயங்கிவிழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஐ.சி.யூ. வார்டில் அமைச்சர் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பின் மாலையில் அமைச்சர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற