தலிபான்களுடன் உறவைத் துண்டிக்க பாகிஸ்தான் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தலிபானுடனான தொடர்பை பாகிஸ்தான் முற்றிலும் துண்டிக்காது என்று அந்நாட்டின் வெளியுறவுச் செய்தித்தொடர்பாளர் ரியாஸ் முகமது கான் அறிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய முஸ்லீம் நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் உள்ள உறவைத்துண்டித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடுக்கவுள்ள தாக்குதலுக்கு முழு ஆதரவு தெரிவித்துவரும்பாகிஸ்தான் தலிகான்களுடன் உள்ள உறவை துண்டிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ரியாஸ் முகமது கான் கூறியிருப்பதாவது:

தலிபான்களுடன் எங்களுக்கு உள்ள தொடர்பு அப்படியே உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள்காபூலில் உள்ள எங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை பாகிஸ்தானுக்கு வர உத்தரவிட்டுள்ளோம்.

ஆனால் ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை முற்றிலும் துண்டிக்கும்நோக்கம் எங்களுக்கு இல்லை. அவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது பாகிஸ்தான் அமைந்துள்ள புவியியல்அமைப்பின் கட்டாயம்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் தூதரகத்தை காலிசெய்யவும் நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால்இதுதான் உலகின் மற்ற நாடுகளுடன் தலிபான்கள் தொடர்புகொள்ள ஒரு ஜன்னலாகப் பயன்படுகிறது என்றார்.

மேலும் மற்றொரு வெளியுறவுத்துறை அதிகாரியிடம் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய யூனியன்குழுவினர் வருகைபற்றிக் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,

தற்போது வந்துள்ள ஐரோப்பிய யூனியன் குழுவினர், ஆப்ாகனிஸ்தான் மீது அமெரிக்கா எடுக்கவிருக்கும்நடவடிக்கைகள் பற்றி எங்கள் அதிகாரிகளிடம் விவாதித்து வருகிறார்கள்.

மேலும் இந்தக் குழுவின் ஒருபகுதி தான் தற்போது வந்துள்ளது. குழுவின் பெரும்பகுதியினர் இனிமேல்தான்வருவார்கள். இவர்களிடம் அதிபர் பர்வேஷ் முஷ்ரப், அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முழுஒத்துழைப்புக் கொடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற