கும்பகோணம் அருகே சாலை விபத்தில் 3 பேர் சாவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே காரும் லாரியும் புதன்கிழமை காலை நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

கும்பகோணம்-அம்மாசத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு காரும் லாரி ஒன்றும் நேருக்கு நேர்மோதிக் கொண்டன.

இவ்விபத்தில், கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் படுகாயங்களுடன்தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில், 3 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 2 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விபத்து குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற