பீதி குறையாத சென்னை மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட லேசான நில அதிர்ச்சி சென்னை மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்து 7 நிமிடங்களில் 2 முறை ஏற்பட்ட இந்த லேசான நில அதிர்ச்சியால் நகர்முழுவதிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளனர்.

பெரும் பாதிப்பை இந்த நில அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், பெரும் பூகம்பமாக இது மாறலாம் என்றஎண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது. புதன்கிழமை காலையிலிருந்து எங்கு பார்த்தாலும் மக்கள் நிலஅதிர்ச்சியைப் பற்றியே பேசிக் கொண்டுள்ளனர்.

பூகம்பம் வந்தால் எப்படித் தப்பிப்பது, பூகம்பம் எப்படி வருகிறது, இதனால் ஏற்படும் விளைவுகள் வரையிலும்மக்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாண்டிச்சேரிக்கு அருகே கடலில்தான் பூகம்பத்தின் மையம் இருந்தது என்று நிபுணர்கள் கூறியுள்ள போதிலும்,ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது அமெரிக்கா அணுகுண்டு போன்ற பலமுள்ள குண்டை வீசியதால் ஏற்பட்டபாதிப்புதான் இது என்றும் ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதவிர சென்னை நகரில் நிலத்தடி நீரின் இருப்பு குறைந்து, சென்னைக்குக் கீழே வெறும் பாறைதான்இருப்பதாகவும், அதனால்தான் இங்கு நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நிலத்தடி நீர் குறைவுக்கும், நில அதிர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று பூகம்பவியல் ஆய்வு மைய துணைஇயக்குநர் பட்நாகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

நில அதிர்ச்சி வந்தாலும் வந்தது, அத்தியாவசியப் பிரச்சினையான தண்ணீர்ப் பிரச்சினையை சென்னை மக்கள்இப்போதைக்கு மறந்து விட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற