இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளை, தன் நாட்டிற்கு வர அனுமதித்த பாகிஸ்தான், புதன்கிழமைமீண்டும் எல்லைகளை மூடிவிட்டது.
ஏற்கனவே உள்நாட்டுப் போரினாலும், வறுமையின் கொடுமையாலும் ஆப்கானியர்கள் தங்கள் நாட்டை விட்டுவெளியேறி, பாகிஸ்தானில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 23 லட்சம் ஆப்கன் அகதிகள்பாகிஸ்தானில் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவும் விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளது என்பதை உணர்ந்து, அதிக அளவில் அவர்கள்வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பாகிஸ்தான் தன் எல்லைப் பகுதியை மூடியிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆப்கனை விட்டு வெளியேற முடியாமல் ஆப்கன் அகதிகள் தவித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், இந்த அகதிகளுக்குத் தேவையான உணவு முதலான தேவைகளை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா.தெரிவித்ததையடுத்து, பாகிஸ்தான் மீண்டும் எல்லைக் கதவுகளை செவ்வாய்க்கிழமை திறந்து விட்டது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானுக்குள் வந்து குவிய ஆரம்பித்தனர்.
ஆனால், அகதிகளுடன் தலிபான்களும், வேறு தீவிரவாதிகளும் பாகிஸ்தானுக்குள் வந்து, பாகிஸ்தானைத் தாக்கநேரிடலாம் என்று அஞ்சிய பாகிஸ்தான், மீண்டும் ஆப்கன் எல்லையை மூடிவிட்டது.
இந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 20,000 ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் நுழைந்துள்ளனர். இதையடுத்து,மீண்டும் லட்சக்கணக்கான அகதிகள் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!