அதிருப்தி தலிபான் படைத் தலைவர் அமெரிக்காவுக்கு ஆதரவு

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

அதிருப்தி தலிபான் படைத் தலைவரான இஸ்மாயில் கானை அமெரிக்கா தன் பக்கம் இழுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தலிபான்களுடன் இணைந்து சோவியத் யூனியன் ராணுவத்தை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கியத் தலைவர்ளில் ஒருவர்இஸ்மாயில் கான். ஆனால், பின்னர் இவருக்கும் தலிபான் ஆட்சியாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து இவரை தலிபான்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் இவர் சிறையிலிருந்துதப்பினார். தலிபான்களில் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஈரானில் தஞ்சம் புகுந்தார்.

பின்னர் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து சிறிய படையைத் திரட்டினார். அந்தப் பகுதியில் இருந்த வண்ணம்தலிபான்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்.

இப்போது இவரை அமெரிக்கா தன் பக்கம் இழுத்துள்ளதாகத் தெரிகிறது. இவரது கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குள்அமெரிக்கப் படைகளை இவர் அனுமதித்துள்ளார். இவரை எப்படியாவது ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளுக்குள் நுழையவைத்து தலைநகர் காபூலையும் காண்டஹாரையும் பிடித்துவிட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்காக இவருக்கு உதவியாக அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் வந்திறங்கியவண்ணம் உள்ளனர்.

முதலில் தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் உதவியுடன் தாக்குதல் நடத்த அமெரிக்காநினைத்தது. ஆனால், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ரஷ்யாவுக்கு மிக வேண்டியவர்கள் என்பதால் அவர்களுக்கு மாற்றாகஇஸ்மாயில் கானை அமெரிக்கா தன் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.

காண்டஹாருக்குள் இஸ்மாயில் கானின் படை நுந்ைதுவிட்டால் அவரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக 2 முக்கிய தலிபான்அமைச்சர்களும் ஒரு மாநில கவர்னரும் உறுதியளித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற