வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: 4 பேர் தலைமறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி:

அரசு அலுவலகங்களிலும், பல்கலைகழகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும்வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடிசெய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதி அருகே உஸ்மான் என்பவர் வேலை வாங்கித் தரும்தனியார் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் அரசு அலுவலகங்களிலும்,தனியார் நிறுவனங்களிலும், பல்கலைகழகங்களிலும் வேலை வாங்கி தருவதாகவும்,வேலை வேண்டுபவர்கள் தன்னை அணுகுமாறும் விளம்பரம் செய்தார்.

வேலை இல்லாத பல பட்டதாரி இளைஞர்களும், பெண்களும் இவரிடம் சென்றுதங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். இவர் பெரும் தொகையை முன்பணமாககேட்டார். வேலை கிடைத்தால் போதும் என்று பலரும் அவர் கேட்டதொகையை முன் பணமாக கொடுத்தனர்.

காலம்தான் கடந்தது வேலை கிடைக்கவில்லை. அவரிடம் கேட்டபோது அவரும்சரியான பதில் கூறவில்லை. இதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவர் அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் உஸ்மான் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உள்பட 3 பேரும்தலைமறைவாகிவிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து உஸ்மான், பெண் மற்றும் 2பேரை தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற