உள்ளாட்சித் தேர்தல் - திருச்சி மாநகராட்சி ஒரு பார்வை...

Posted By:
Subscribe to Oneindia Tamil

காவிரிக் கரையின் ஓரத்தில் இரு புறமும் பரந்து விரிந்து கிடக்கும், தமிழகத்தின் நான்காவது பெரிய நகரம் திருச்சிராப்பள்ளி.

சோழர்களின் கரத்தில் இருந்த திருச்சி பிற்காலத்தில் பல்லவர்களின் ஆளுமையின் கீழ் இருந்தது. ஆனால் கைப்பற்றிய திருச்சியைக் கட்டிக் காக்கும் திறமைபல்லவர்களுக்கு இல்லை, பலமுறை நடந்த போரில் பாண்டியர்களிடம் திருச்சியைப் பறிகொடுத்தனர்.

இந்த இழுபறிக்கு 10-வது நூற்றாண்டில் முடிவு வந்தது. அப்போது நடந்த போரில் பாண்டியர்கள் தோல்வியுற்று, மீண்டும் திருச்சி சோழர்களின் கைக்கு திரும்பிவந்தது. அதன்பிறகு கடைசி வரை சோழ மன்னர்களே திருச்சியை அரசாண்டனர்.

சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு திருச்சி விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணியைக் கொண்ட திருச்சிநகரம், 1994ம் ஆண்டு மாநகரமானது, அதாவது மாநகராட்சி அந்தஸ்தைப் பெற்றது. 1996ம் ஆண்டு முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது.

திருச்சி நகரின் மக்கள் தொகை 1991ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7,11,120 ஆகும். நகரின் மொத்த பரப்பளவு 23.26 சதுரகிலோமீட்டராகும்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதன் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி இருந்து வந்தார். ஆனால் அவர் ஒரு ஆண்டுக்கு முன்புமரணமடைந்து விட்டார். எனவே மேயர் பொறுப்பை துணை மேயர் எமிலி ரிச்சர்ட் கவனித்து வந்தார்.

திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை அதன் முதல் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக துணையுடன் 96ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது.மாநகரின் முதல் மேயர் என்ற பெருமை புனிதவள்ளி பழனியாண்டிக்குக் கிடைத்தது. இவர் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் பழனியாண்டியின் மனைவி ஆவார்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

திருச்சியைப் பொறுத்தவரை அது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாறி மாறி ஆதரவாக இருந்துள்ளது. ரங்கராஜன் குமார மங்கலம் வந்த பிறகுதான்அது பாரதீய ஜனதாவுக்கும் ஆதரவாக தன்னை மாற்றிக் கொண்டது.

ஆனால் அது கடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில் நிரூபிக்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் அதிமுகவின் தலித் எழில்மலை அபார வெற்றியைப்பெற்றார்.

மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் புனிதவள்ளி பழனியாண்டி பெற்றிருந்தாலும் கூட மாநகருக்கு செய்ய வேண்டிய வேலைகளை விட துணைமேயர் எமிலியுடன் சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது. இருவரும் மோதாத நாளே கிடையாது. யார் பெரியவர் என்று இவர்கள் அடித்துக் கொண்டசண்டையால் பலமுறை மூப்பனார் தலையிட்டு சமாதானப்படுத்த வேண்டியதாக இருந்தது.

இருப்பினும் மாநகரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள் கொஞ்சம் உள்ளன. பல முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சிக்னல்கள்அமைக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்தை சீர்செய்ய பெருமளவில் உதவியுள்ளது.

நகரில் இருந்த பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நகரமே அகலமாகி விட்டது. இதுபோல பல விஷயங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில்நடந்துள்ளன.

கடைசி நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியை விட்டு அதிமுகவுக்குத் தாவிய பிறகு மாநகராட்சி நிர்வாகத்தில் மெத்தனம் ஏற்பட்டுவிட்டதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், புனிதவள்ளி பழனியாண்டியின் மறைவுக்குப் பிறகு மாநகராட்சி நிர்வாகம் இயங்கவேயில்லைஎன்றும் கூறுகிறார்கள்.

திமுகவுக்கு இந்த முறை தேர்தல் அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதன் முக்கியத் தளபதியான அன்பில் பொய்யாமொழியின்இழப்பு திமுகவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்குத்தான் மேயர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் திமுகதரப்பில் பேசப்படுகிறது.

திமுக தரப்பில் நிர்மலா லோகநாதன் போட்டியிடுகிறார். கருணாநிதி கைது, அதைத் தொடர்ந்து திமுக பேரணியில் நடந்த வன்முறை ஆகியவற்றையும், கடந்தஐந்து ஆண்டுகளில் தமாகா நிர்வாகத்தில் திருச்சி மாநகராட்சி இருந்தபோது நடந்த குடுமிபிடிச் சண்டைகள், மெத்தனமான நிர்வாகம் போன்றவற்றைமுன்னிருத்தியே வாக்கு கேட்கப் போகிறது திமுக.

தற்போதுள்ள சூழ்நிலையில் திமுகவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும் தமாகா நிறுத்தப் போகும் வேட்பாளரைப் பொறுத்தே வெற்றி,தோல்வி முடிவு செய்யப்படும்.

இந்த முறையும் தமிழ் மாநில காங்கிரஸே மீண்டும் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறது. மேயர் வேட்பாளராக சாருபாலா தொண்டைமான்போட்டியிடுகிறார். இவருக்கு இந்தப் பகுதியில் கனிசமான அளவு செல்வாக்கு இருக்கிறுது.

ஜி.கே.வாசன் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது என்பதால் முதல் கோணல் முற்றும் கோணலாகி விடும் என்பதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்துஜாக்கிரதையுடன் அவர் இருக்கிறார். மேலும், திருச்சி மட்டுமே தமாகாவுக்குக் கிடைத்துள்ள மேயர் பதவி. எனவே அதைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தமாகாவினர் களத்தில் இறங்கவிருக்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற