சிக்கனத்துக்கு மாறிய வேட்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் சைக்கிள்களிலும், சைக்கிள்ரிக்ஷாக்களிலும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது புயலென பறக்கும் ஆட்டோக்கள், வெள்ளைநிற அம்பாசிடர் கார்கள், டாடாசுமோக்கள்தான். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அவற்றை அதிகமாக பார்க்க முடியவில்லை. காரணம், தேர்தல் கமிஷன்விதித்திருக்கும் நிபந்தனைகள்தான்.

சென்னையில் மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அதிகபட்சமாக 4 லட்சம் வரை மட்டுமே செலவிடலாம். மற்ற நகரங்களில்மேயர் பதவிக்கு நிற்பவர்கள் ரூ. 2.5 லட்சம் மட்டுமே செலவிடலாம். கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் அதிகபட்சமாக5,000 மட்டுமே செலவிடலாம்.

இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.ஆட்டோக்களில் செல்வதற்குப் பதிலாக சைக்கிள்களில் மைக்கைக் கட்டி பொடி நடையாக சென்று பிரசாரம் செய்கிறார்கள்.கொஞ்சம் வசதியான பிரசாரம் என்றால் அது சைக்கிள் ரிக்ஷாதான்.

சென்னையின் பல பகுதிகளில் இந்த வாகனங்கள்தான் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கின்றன. சுவர் விளம்பரங்களிலும்பிரமாண்டத்தைப் பார்க்க முடியவில்லை. திக சார்பில் ஸ்டாலினுக்காக வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் வெகுசாதாரணமாக காணப்படுகின்றன.

பளீரென கண்ணைப் பறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் விளம்பரம் செய்வது திமுகவினரின் வாடிக்கை. சுவர்விளம்பரங்களில் அவர்களை மிஞ்ச ஆளே கிடையாது என்பது வரலாறு.

ஆனால், இந்த முறை சாதாரணமாக வெள்ளையடித்து அதன் மேல் கறுப்பு, சிவப்பு நிறங்களில் மட்டி பெயிண்ட்களை வாங்கிஅதில் ஸ்டாலின் பெயரை வரைந்து போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள். சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொஞ்சம்ஆடம்பரமான விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது.

அதேபோல, சுவரொட்டிகளும் சாதாரண அளவிலேயே உள்ளன. சுவர்களை நிறைத்து பெரிய பெரிய சுவரொட்டிகளைப் பார்க்கமுடியவில்லை. துண்டுப் பிரசுரம் அளவுக்குத்தான் போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அக்கறையில்லாமல் பிரசாரம் செய்கிறார்களோ என்று மக்கள் எண்ணும் அளவுக்கு ரொம்பஅமைதியாகவே இருந்து வருகிறது தேர்தல் பிரசாரம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற