டான்சி வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: ஜெ. வக்கீல் வாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த அப்பீல் மனு மீதானவிசாரணை 3வது நாளாக இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெற்றது.

டான்சி வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றுஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போதுஅரசுக்கு சொந்தமானடான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதால் அரசுக்கு ரூ 3 கோடி இழப்புஏற்படுத்தியதாக ஜெயலலிதா மீது முந்தைய திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம்கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியவழக்கில் ஜெயலலிதாவுக்கு 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்து தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தனி நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.

இந்த அப்பீல் மனு மீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை முதல் நீதிபதி தினகர் முன்சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகிவாதாடி வருகிறார்.

வியாழக்கிழமை 3வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.கே.கே.வேணுகோபால் தனது வாதத்தின் போது கூறுகையில், டான்சி நிலத்தைஜெயலலிதா வாங்கியதன் மூலம் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை.இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற