அடுத்த மாதம் வாஜ்பாய் ரஷ்யா பயணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

இந்திய பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் (நவம்பர்) 4ம் தேதி ரஷ்யா செல்கிறார்.

இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனமான இடார்-டாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா சென்றிருந்தபோது பிரதமர் வாஜ்பாயைரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதை வாஜ்பாயும் ஏற்றுக்கொண்டார்.

வாஜ்பாய் நவம்பர் மாதம் ரஷ்யா செல்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியபிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் (நவம்பர்) 4ம் தேதி 4 நாள் பயணமாக ரஷ்யாவரவிருக்கிறார் என்று ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 நாள் பயணத்தின் போது வாஜ்பாய் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் முக்கியவிஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ரஷ்யாவின் உயர் அதிகாரிகளைசந்த்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். பல தொழிலதிபர்களையும் சந்தித்து வாஜ்பாய்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து வாஜ்பாய்பேச்சுவார்த்தை நடத்துவார்.

இரு நாட்டு நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும்.ஆனாலும் ரஷ்ய அதிபருடன் வாஜ்பாய் நடத்தும் பேச்சுவார்த்தையில் தீவிரவாதத்தைஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது குறித்த விஷயத்திற்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கப்படும்.

இவ்வாறு அச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற