ஆப்கானிஸ்தானில் நுழைந்தது அமெரிக்க - ரஷ்ய கூட்டுப் படை
டெல்லி:
அமெரிக்க-ரஷ்ய கூட்டு அதிரடிப் படையினர் ஆப்கானிஸ்தானில் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என பாகிஸ்தானின் த நியூஸ்இன்டர்நேசனல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெல்டா படையினரும், சீல் கமாண்டோக்களும், தஜிக்கிஸ்தானில் நிலை கொண்டுள்ள ரஷ்யாவின் 201 வதுரைபிள் டிவிஷன் படையினரும் இத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தஜிக்கிஸ்தானில் இருந்து புறப்பட்ட அமெரிக்க-ரஷ்ய கமாண்டோ படையினர் நேற்று (வியாழக்கிழமை) முதல்ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தாக்க ஆரம்பித்துவிட்டனர். பாமீர் மலைப் பகுதியில் தான் ஒரு காலத்தில் ரஷ்யா தனது அணுஆயுதங்கள் பொறுத்தப்பட்ட ஏவுகணைகளை குவித்து வைத்திருந்தது.
இந்த மலைப் பகுதி குறித்த விவரமான வரைபடங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. இதையடுத்து ரஷ்ய உதவியுடன் அமெரிக்ககமாண்டோக்கள் இந்தப் பகுதியில் நுழைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் 23ம் தேதி ரஷ்ய அதிபர் புடினும் அமெரிக்க அதிபர் புஷ்சும் சந்தித்துப் பேசியபோது இந்த கூட்டுத்தாக்குதல் குறித்து முடிவானது. இதையடுத்து தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் நவீன ஆயுதங்களை ரஷ்ய ராணுவத்துக்குஅமெரிக்கா அளித்தது.
இந்த ஆயுதங்களுடன் ஒரு வாரம் பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்யப் படையினர் இப்போது அமெரிக்கர்களுடன் இணைந்துதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இத் தாக்குதலில் இறங்கியுள்ள ரஷ்யப் படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் புஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர்கள்.ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் இந்த இனத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஷ்ய வீரர்கள் இந்தப் பகுதியில் பேசப்படும் தாரி மொழியை நன்கு அறிந்தவர்கள். மேலும் இந்த பாமீர் மலைப் பகுதியயைஅங்குலம் அங்குலமாக அறிந்து வைத்திருப்பவர்கள்.
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் ரஷ்யாவுடன் இணைந்து பின்லேடனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தென்பகுதியில் பிரிட்டனுடன் இணைந்து தலிபான்களைத் தாக்க உள்ளது.
இதற்காக சுமார் 500 டாங்கிகளுடன் பிரிட்டிஷ் கமாண்டோ படையினர் ஓமன் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications