குற்றவாளியின் மனுவை சட்டப்படி ஏற்ற அதிகாரி
மதுரை:
மண்ணெண்ணெய் கடத்தல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரின் வேட்புமனு மதுரையில் ஏற்கப்பட்டுள்ளது.
சட்டப்படிதான் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று இதற்கு தேர்தல் அதிகாரிவிளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி 35வது வார்டுக்கு திமுக சார்பில் போஸ் என்பவர் மனு தாக்கல்செய்திருந்தார். 1996ம் ஆண்டு மண்ணெண்ணெய் கடத்திய குற்றத்திற்காக இவருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றத்திற்காக ரூ.3,000 அபாரதமும்கட்டினார் இந்த போஸ்.
வேட்புமனு பரிசீலனை நடைபெற்றபோது 2 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற போஸின்வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று மாணிக்கம் மற்றும் ராமசாமி என்ற இரண்டு பேர்புகார் செய்திருந்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடந்தது.பின்னர் திமுக வேட்பாளர் போஸின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போஸின் வேட்புமனு ஏற்கப்பட்டது ஏன் என்பது குறித்து தெற்கு மண்டல தேர்தல்அதிகாரியும், தெற்கு மண்டல உதவி கமிஷனருமான முருகேசன் கூறுகையில்,
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள்தான் தேர்தலில்வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது. அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தால் அதுநிராகரிக்கப்படும்.
போசுக்கு இரண்டு ஆண்டுதான் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால்இவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 51வது பிரிவு 8 (1) மற்றும் (2)ன்படி இரண்டு வருடம்ஒருவர் தண்டனை பெற்றால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்தச்சட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்குத்தான் பொருந்தும்.
மாநகராட்சிக்கென உள்ள சட்டத்தை பின்பற்றி தான் போசின் மனு ஏற்கப்பட்டுள்ளது.மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கென தனி சட்டமே உள்ளது என்றுஅவர் கூறினார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications