காஷ்மீர் மக்களை ஏமாற்ற ஐ.எஸ்.ஐ. புதிய திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும் மாநில அரசின் சதி என்று காஷ்மீர் மக்களைநம்பவைக்க, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு "டார்கட் பென்(பேனாவைக் குறி வை) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. காஷ்மீர் பத்திரிக்கைகளில் மாநிலஅரசுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான செய்திகளை போட வைக்கும் திட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.

இதற்காக நிருபர்களை விலைக்கு வாங்குவது முதல் பத்திரிக்கையாளர்களை மிரட்டுவது வரை அனைத்துவகையான செயல்களிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை காஷ்மீர் சட்டமன்றக் கட்டடத்தின் மீது கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஸ்-ஏ-முகம்மத் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் இந்தத் தாக்குதல் காஷ்மீர் மாநில அரசுதான்செய்தது என்றும், இதன் மூலம் பாகிஸ்தானை உலக நாடுகள் மத்தியில் தீவிரவாத நாடாகக் காண்பிக்கவும் இந்தியஅரசு எடுத்துவரும் முயற்சி என்றும் மக்களை நம்பவைக்க ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டுள்ளது.

இதற்காக காஷ்மீரில் வெளியாகும் பத்திரிக்கைகளை முதலில் நம்பவைக்க முயலவேண்டும் என்றுதீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. கட்டளையிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு டார்கட் பென் என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக்வும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சில தீவிரவாத இயக்கங்கள், பத்திரிக்கை அலுவலகங்களை அணுகி இவ்வாறு கூறி வருகின்றன.ஆனால் எந்த பத்திரிக்கையும் இவர்கள் கூறுவதை நம்பத் தயாராக இல்லை.

ஏனென்றால் கார் வெடிகுண்டு தாக்குதலில் கடைபிடிக்கப்பட்ட யுக்திகள் அனைத்தும், தீவிரவாதிகளின்தற்கொலைப்படை இதற்கு முன்பு கடைபிடித்ததைப் போன்றே உள்ளது. மேலும் தாக்குதல் நடந்த உடனேஜெய்ஸ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகள் நாங்கள்தான் தாக்கினோம் என்று அறிவித்துவிட்டார்கள்.

ஆனால் உலகம் முழுவதும் அந்தத் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருப்பதால், அவர்கள் பின்வாங்கஆரம்பித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு உடனே பொறுப்பேற்றதற்காக ஐ.எஸ்.ஐ. அமைப்பு, ஜெய்ஸ்-ஏ-முகம்மத் அமைப்பினைகடுமையாகக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்போது பொய்யான செய்திகளைப் பரப்பபத்திரிக்கைகளையே ஐ.எஸ்.ஐ. குறி வைக்க ஆரம்பித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற