அரசியலை விட்டே விலகத் தயார் - கருணாநிதி
சென்னை:
அமைச்சர் பொன்னையன் கூறுவதைப் போல எனக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக நிருபித்தால்,நான் அரசியலை விட்டே விலகத் தயார் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்தப்பிரச்சாரத்தில் அதிமுக, திமுக மற்றும காங்கிரஸ் ஆகிய 3 அணிகளும் தனித்தனியே மற்ற அணிகளைப்பற்றியும்,அதன் தலைவர்களைப் பற்றியும் விமர்சித்துவருகின்றன.
இதேபோல நிதி அமைச்சர் பொன்னையன் கருணாநிதிக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்குமேல் சொத்துக்கள் இருப்பதாகக்குற்றம் சாட்டினார். இதற்குப்பதிலளித்துப் பேசுகையில் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் பொன்னையன் வெந்ததைத் தின்றுவிட்டு, வாயில் வந்ததைப் பேசுகின்ற பொறுப்பற்ற மனிதரைப் போலபேசுகிறார்.
எனக்கு ரூ.30 ஆயிரம் கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக அவர் நிருபித்தால், அதற்குரிய தண்டனையைஏற்றுக்கொண்டு நான் அரசியலைவிட்டே விலகத் தயார். இதே தன்மான உணர்வோடு என் அறைகூவலைஏற்றுக்கொள்ள அவர் தயாரா?
இப்படித்தான் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த குழந்தைவேலு என்ற முன்னாள் அமைச்சர் என் மீதுஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அள்ளித் தெளித்தார். பிறகு நிருபிக்க முடியாமல் போனவுடன் சட்டமன்றத்தில்கூனிக்குறுகி நின்றார். நிரூபிக்க முடியாவிட்டால் அந்த நிலைக்கு பொன்னையனும் தள்ளப்பட்டுவிடுவார்.
மேலும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மாநிலத்துக் மாநிலம் மட்டுமல்ல மாவட்டத்துக்கு மாவட்டம் தன்நிலையை மாற்றிக்கொள்ளும் என்பது, மதுரையில் அந்தக் கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதிலிருந்துதெரிகிறது.
விஷச்சாராய சாவுகள் மக்கள் அளித்த தீர்ப்புக்குக் கிடைத்த பரிசு என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications