இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தினர் கைது
சென்னை:
சென்னை செம்பியம் பகுதியில் போலீஸாரால் பிடிபட்டது சோட்டா ஷகீல் அல்ல என்றும், மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு நிலைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் செம்பியம் பகுதியில் சோட்டா ஷகீல் கைது செய்யப்பட்டதாக செய்தி கிளம்பியது. ஆனால் இதை சென்னை போலீஸ்கமிஷனர் மறுத்தார். ஆனால் அங்கு கைது செய்யப்பட்டது மும்பையைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் 5 பேர் தான் என்று தெரிய வந்துள்ளது. இந்த 5 பேரும் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநில டிஜிபிக்கள் கூட்டத்திற்குப் பிறகு, தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுவருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கல்பாக்கம் அணு மின் நிலையம், சென்னை விமான நிலையம், சென்னைக்கு அருகேயுள்ள ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம்ஆகியவற்றிற்கு அதிகபட்ச பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையப் பாதுகாப்பு குறித்து சட்டம் ஒழுங்கு ஐஜி பாலச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேரடியாக சென்றுபார்வையிட்டு சோதனை செய்தது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சூர்யபிரசாத், தமிழக டிஜிபி நெய்ல்வாலிடம் விமான நிலையபாதுகாப்பு குறித்து நேரில் சந்தித்து விளக்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications