ஆப்கானில் "நார்த்தர்ன் அலையன்ஸ்" ஆட்சிக்கு வர பாக். கடும் எதிர்ப்பு
துபாய்:
நார்த்தர்ன் அலையன்ஸ் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்வதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு நார்த்தர்ன் அலையன்ஸ் ஆட்சிக்கு வந்தால், தலிபான் படையினர் நிச்சயம் தன் நாட்டின் மேல் பெரும்கொரில்லா தாக்குதலை நடத்தும் என்றும் பாகிஸ்தான் அஞ்சுகிறது.
தலிபான்களை நீக்கிவிட்டு, தற்போது இத்தாலி நாட்டு அரசின் பாதுகாப்புடன் ரோம் நகரில் வசித்து வரும்முன்னாள் ஆப்கானிஸ்தான் மன்னரான ஷகீர் ஷாவைத்தான் ஆப்கானிஸ்தான் அதிபராக்க அமெரிக்காதிட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானையும் தலிபான்களையும் அடியோடு வெறுப்பவர் இவர்.
இதற்கு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தலிபான்களை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு நார்த்தர்ன் அலையன்சுக்கு வேண்டிய நபர் யாரையும் ஆட்சியில்அமர்த்தக் கூடாது என நேற்று முன் தினம் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடியாக, "ஆப்கானிஸ்தானின் உள் விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளவேண்டும்" என ஷகீர் ஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் சத்தார் தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களில் 2.5 சதவிகிதம் மட்டுமே உள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர்,அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முயலுகின்றனர்.
இவர்களால் ஆப்கானிஸ்தானில் நல்லாட்சியைக் கொடுக்க முடியாது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால், தலிபான்கள்எங்கள் நாட்டின் மேல் கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள். இதனால் எங்கள் அமைதி பறிபோகும்வாய்ப்புள்ளது" என்று கூறினார் சத்தார்.
நார்த்தர்ன் அலையனஸ் படையினர் உதவியுடன் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனைஉருவாகும் என்பது மட்டும் நிச்சயம். இதனால், இந்தப் படையினருக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்தப் படையினரின் ஆதரவுடன் வடக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கானியஅகதிகளுக்காக ஒரு மருத்துவமனையையும் இந்தியா அமைத்துள்ளது.
நாட்டின் 10 சதவீதப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படைக்குஇந்தியாவைத் தவிர ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் தங்களுடைய முழு ஆதரவைத்தெரிவித்துள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications