கிரிக்கெட்: இந்தியாவுக்கு வெற்றி

Subscribe to Oneindia Tamil

செஞ்சுரியன் பார்க்:

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவுடனான 2வது லீக் ஆட்டத்தில், இந்தியா 41 ரன்கள்வித்தியாசத்தில் வென்றது.

முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை ஜீரணம் செய்ய முடியாத இந்திய அணியினர், இந்தப் போட்டியில்எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்ற வேகத்தில் களமிறங்கினர்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பந்து வீச்சுதான் காரணம் என்று சவ்ரவ் கங்குலி நினைத்தாரோ என்னவோ,இந்தப் போட்டியில் டாஸை வென்றவுடன் அவர் செய்த முதல் காரியம் - இந்திய அணியினரை பேட்டிங் செய்யஅழைத்ததுதான்.

எப்படியும் பந்து வீச்சின் மூலம்தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கங்குலி இவ்வாறுசெய்துள்ளார்.

அதன்படி இந்திய அணியினர் மட்டை வீசத் துவங்கினர். முதல் போட்டியில் சதம் அடித்த கங்குலியும், சச்சின்டெண்டுல்கரும் இந்தப் போட்டியில் சோபிக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் பொல்லாக் வீசிய பந்தை கல்லீஸ் கேட்ச் பிடித்தது உண்மைதானா என்று தெரிந்துகொள்வதற்கு முன்னரே, அவருக்கு அவுட் கொடுத்து பெவிலியனுக்கு அனுப்பி விட்டார் அம்பயர்.

டெண்டுல்கர் தன் பங்குக்கு 55 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ராகுல் திராவிடும் (54), யுவராஜ்சிங்கும் ஓரளவு நிலைத்து நின்று ஆடினார்கள். இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தஇந்தியா 233 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்து பேட் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணியினரை, ஆரம்பித்திலிருந்தே தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்திய அணியினர்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, இந்தியஅணியினர் உற்சாகமடைந்தனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன் சிங் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரின் அதிரடி பந்து வீச்சில், 100ரன்களை தென் ஆப்பிரிக்கா எட்டுவதற்கு முன்பே, 7 விக்கெட்டுகளை அது இழந்திருந்தது.

குலூஸ்னர் மட்டுமே ஓரளவு நின்று நிதானமாக ஆடி, தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனாலும்சரியாக 49வது ஓவரின் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா, 192 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் "மேன் ஆப் தி மேட்ச்"சைத் தட்டிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+