காபூல் மீது மிக பயங்கர தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
அமெரிக்க போர் விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல்நகரில் மிக பயங்கரத் தாக்குதலை நடத்தின. தாக்குதல் நடந்த இந்த 4 நாள்களிலேயே இப்போதுதான் காபூல் மீதுஅதிக அளவில் குண்டுகளை மழையாகப் பொழிந்துள்ளது அமெரிக்கா.
இன்று காலையும் அமெரிக்க விமானங்கள் காபூல் நகரத்தில்தான் கண் விழித்தன.
காபூலின் வடக்குப் பகுதியில் குறைந்தது 12 குண்டுகளாவது போடப்பட்டிருக்கும் என்று காபூல் நகர மக்கள்கூறினர்.
தொடர்ந்து பறந்து விமானங்கள், அருகருகிலேயே குண்டுகளைப் போட்டுவிட்டுச் சென்றன என்றும் அம்மக்கள்கூறினர்.
இதற்கிடையே, முதல் நாள் தாக்குதலின்போது தலிபான் தலைவர் முல்லா முகம்மது ஒமர் மயிரிழையில்தப்பித்தாலும், அவர் வீட்டிலிருந்த அவருடைய 2 உறவினர்கள் அந்தத் தாக்குதலில் இறந்தனர் என்று அமெரிக்கஅதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications