கொல்கத்தா நிலக்கரி சுரங்க விபத்தில் 15 பேர் பலி
கொல்கத்தா:
கிழக்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கம் திடீரென இடிந்துவிழுந்ததலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 150 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சுரங்கம் மிகவும் பழுதடைந்து மோசமாக இருந்ததால், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்ததது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக அந்தச் சுரங்கத்தின் முதலாளி, அதில் கரிஎடுத்து வருகிறார்.
இந்தச் சுரங்கத்தில் நேற்று (புதன்கிழமை) 150க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிக்கும் போது, காலை10.00 மணியளவில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஒரே ஒரு சுரங்கத் தொழிலாளி மட்டும்இடிபாடுகளில் இருந்து, தலையில் பலத்த காயத்துடன் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஒருவர் தான் மீட்கப்பட்டுள்ளார்.எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்று இன்னும்தெரியவில்லை.
இந்தச்சுரங்கத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால்சட்டத்திற்குப் புறம்பாக அவர்கள் அதைப் பயன்படுத்தியதன் விளைவாகவே இந்தத் துயரச் சம்பவம்நேரிட்டுள்ளது.
மீட்பு பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் மட்டுமே மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடமும் இடிபாடுகளை அகற்றுவதற்குப் போதுமான எந்திரங்களும் கருவிகளும் இல்லை.
மேலும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்துவது சில ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.இதை ஆய்வு செய்யவேண்டிய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுகொள்ளாமல்விட்டுவிடுவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடந்துவிடுகின்றன.
கடைசியாக கிடைத்த தகவலின்படி 15 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications