துப்புறவு தொழிலாளர்கள் ஸ்டிரைக் - குப்பை மலையில் புதைந்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகரில் தனியார் துப்புறவுத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டதால், நகரில்குப்பைகள் தேங்கி பொதுமக்களை நெளிய வைத்து விட்டன.

சென்னையின் பல பகுதிகளில் சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் துப்புறவு நிறுவனமான ஓனிக்ஸ் நிறுவனம்குப்பைகளை அகற்றும் பணியைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பணிக்கு சென்னை மக்களிடையே நல்லவரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 25 தொழிலாளர்களை ஓனிக்ஸ் நிறுவனம்வேலையிலிருந்து நிறுத்தி விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து மற்ற தொழிலாளர்கள் அனைவரும் புதன்கிழமைதிடீர் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

இதனால் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில்குப்பைகள் தெருக்களில் மலை போல்குவிந்து கிடந்தன. ஓனிக்ஸ் நிறுவனம் வைத்துள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. தற்போது மழை வேறுஅவ்வப்போது பெய்து வருவதால் குப்பைகள் மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் இப்பிரச்சினையில் தலையிட்டு விரைவாக ஓனிக்ஸ் தொழிலாளர்கள்பிரச்சினைக்குத் தீர்வு காண முயல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+