சேலம் - கள்ளச்சாராய வழக்கில் பெண் வேட்பாளர் கைது
சேலம்:
சேலம் ஆத்தூர் அருகே கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் வேட்பாளர் ஓட்டுச் சேகரித்துக்கொண்டிருக்கும் போது பிடிபட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பேரூராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் ஜோதிபெருமாள். இவர் மீது 3 கள்ளச் சாராய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஜோதி கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்ட்டது. இருப்பினும் அவர்போலீசாரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ஜோதி மீண்டும் அதே வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதனால்அந்த வார்டுக்குச் சென்று ரகசியமாக ஓட்டு சேகரிப்பில் அவர் ஈடுபட்டிருந்தார்.
இதையறிந்த சிலர், ஆத்தூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே விரைந்து வந்த போலீசார் ஓட்டுச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஜோதியைக் கைது செய்தனர்.
பிறகு ஆத்தூர் முதல்வகுப்பு சமாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நீதிபதி வெங்கடகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டஜோதிபெருமாளை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஜோதிபெருமாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications