கர்நாடகம் நீர் திறந்து விட்டதா? அதிகாரி விளக்கம்
சென்னை:
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு காவிரி நதி நீர் ஆணையம்உத்தரவிட்டிருப்பது குறித்து தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்று மாநிலபொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்துள்ளதாக கூறப்படும்உத்தரவு குறித்து இதுவரை எங்களுக்கு தகவல் ஏதும் இல்லை. அதேபோல, கர்நாடகம் காவிரியிலிருந்து தண்ணீர்திறந்து விட்டதாக கூறப்படும் செய்தி குறித்தும் எங்களுக்குத் தகவல் இல்லை.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின்நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையில் தற்போது 56.2 அடி நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்துபாசனத்திற்காக 3400 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
சென்னைக் குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழக மற்றும் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளின் கூட்டம்சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சென்னைக்குக் குடிநீர் வழங்குவது தொடர்பான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.18ம் தேதி பிரதமர் வாஜ்பாய் சென்னை வருவதாக ஒரு திட்டம் உள்ளது. அப்படி அவர் வரும் பட்சத்தில் இந்தக்கூட்டம் தள்ளிப் போகலாம் என்றார் அவர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications