"வன்முறையை தூண்டினால்..." - திமுகவுக்கு ஜெ. எச்சரிக்கை
சென்னை:
உள்ளாட்சி தேர்தலின் போது கலவரத்தை தூண்டும் திமுகவினர் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றுஜெயலலிதா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும, குழப்பம்விளைவிக்க திட்டமிட்டிருப்பாதகவும் கருணாநிதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
இதை வன்மையாக கண்டித்துள்ளார் ஜெயலலிதா. தேர்தலின் போது கலவரத்தை தூண்டும் விதமாக நடந்துகொள்ளும் திமுகவினர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் குழப்பம் விளைவிக்க திட்டமிட்டிருப்பதாக பேட்டி ஒன்றில்கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக. சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பிலிருக்கும் அதிமுக சட்டம், ஒழுங்கைகுலைக்கும் நடவடிக்கைகளில் எவ்வாறு ஈடுபடும்?
அதிமுக தொண்டர்களும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள்.
திமுகவின் எண்ணங்களைதான் கருணாநிதி வெளியிட்டுள்ளார் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாததிமுகவினர் கலவரங்களில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தேர்தலின் போது எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீசாருக்கு உதவ 71 கம்பெனி மத்திய போலீசாரை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருணாநிதி இது போன்று கூறி, தனது கட்சியினரை வன்முறைக்கு தூண்டிவிடுவது கண்டனத்திற்குரியது. அவர்கூறுவதை கேட்டு திமுவினர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்என்று கூறியுள்ளார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications