13 போட்டி வேட்பாளர்களை டிஸ்மிஸ் செய்தார் வாசன்
சென்னை:
வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிடும் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்துபோட்டியிடும், 13 தமாகா போட்டி வேட்பாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
இந்த மாதம் 16 மட்டும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது தமாகா.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு தற்போது மாநகராட்சி, நகராட்சிகளில் உறுப்பினர்களாக உள்ள பலதமாகவினரும் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பலருக்கும் சீட் கிடைக்கவில்லை.
இதே போல் கட்சியின் உயர் மட்டத்திலிருப்பவர்களின் ஆதரவாளர்கள் பலருக்கும் கும் சீட் கிடைக்கவில்லை.புதியவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது.
தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த தமாகாவினர் பலர் தங்களுக்கு சீட் கிடைக்காதகாரணத்தால் தமாகாவின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
தமாகா மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் தமாகா வேட்பாளர்கள் வேட்பு மனுவைவாபஸ் பெற வேண்டும் என்று கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனாலும் பலர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. அவ்வாறு வாபஸ் பெறாமல் அதிகாரபூர்வவேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்களான கோகுலராமன், மேகநாதன்,ஃபாரூக், லட்சுமிபதி, பிரசாத், உன்னி கிருஷ்ணன், சேட், சுசீலா கோபாலகிருஷ்ணன், ஜே.எல். மோகன், சாந்தாபால்,ராணி கிருஷ்ணன், ஏகாம்பரம், திருஞானசவுந்தரி ஆகிய 13 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜி.கே.வாசன்.












Click it and Unblock the Notifications