இந்தியாவில் 2 சூடான் பயிற்சி விமானிகளைக் காணோம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள "ஜாம்ஷெட்பூர் பிளையிங் கிளப்"பில் பயிற்சி பெற்ற 2 சூடான் பயிற்சி விமானிகள்காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, "ஜாம்ஷெட்பூர் பிளையிங் கிளப்"பில் பயிற்சி பெற்ற 2 பயிற்சி விமானிகளைக் காணவில்லை என்றுகூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 2வது வாரம் காணாமல் போன இந்த 2 பயிற்சி விமானிகளும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள்என்றும் கூறப்படுகிறது.
இதுவரை அந்த 2 பேரும் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் ஏதும் இல்லை. அமெரிக்காவில் கடத்தப்பட்டவிமானங்களில் இவர்கள் 2 பேரும் பயணம் செய்தார்களா என்பது குறித்தும் ஒரு தகவலும் இல்லை.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்ததாக, கடந்த ஜூன் மாதம்தான்அப்துல் ரோப் ஹவாஷ் என்ற சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications