தமிழகத்தில் 13,500 இடங்களில் நிலத்தடி நீர் வற்றியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 13 ஆயிரத்து 500 இடங்களில் நிலத்தடி நீர் வற்றியுள்ளது செயற்கைகோள் மூலம்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமுள்ள புவியியல் அமைப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியமும்,அண்ணா பல்கலைகழகமும் இணைந்து அறிவியில் ரீதியாக செயற்கைகோள் மூலம் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது தமிழகத்திலுள்ள 13 ஆயிரத்து 500 இடங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றி விட்டதுஅல்லது வற்றும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்வற்றிவிட்டது கண்டறியப்பட்டுள்ளது

இந்த இடங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.200 கோடி செலவில் நிலத்தடி நீரை உயர்த்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.

நிலத்தடி நீர் வற்றியுள்ள இந்த இடங்களில் மழை நீரை கசிவு நீர் குட்டைகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகளில்சேமிக்கவும், தடுப்பு அணைகள் அதிக அளவில் கட்டவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.

இதன் மூலம் தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்தி நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உலக வங்கி நிதிக்காக தமிழக அரசு காத்திருந்து காலம் கடத்தவில்லை. தமிழக குடிநீர் வடிகால் வாரியமே ரூ.7கோடி செலவில் 117 இடங்களில் இந்த பணியை தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+