நார்த்தர்ன் அலையன்ஸ் படைக்கு இந்தியா முழு ஆதரவு
டெல்லி:
தலிபான்களை ஒழித்துக் கட்டிய பிறகு ஆப்கானிஸ்தானில் அடுத்து அமையும் ஆட்சியில் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருக்கு முக்கிய இடம் தர வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தவுள்ளது.
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பாகிஸ்தானையும் பின் லேடனையும்எதிர்த்து வருகின்றனர்.
தலிபான்களுக்குப் பின் அமையும் ஆட்சியில் இந்தப் படையினருக்கு இடமே தரக் கூடாது என பாகிஸ்தான் கோரிவருகிறது. இன்று பாகிஸ்தானில் தன்னைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலிடம்அதிபர் பர்வேஸ் முஷாரப் இதனை தீவிரமாக வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ஏனெனில், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் ஆட்சிக்கு வந்தால் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான வாலாட்டமுடியாது. தீவிரவாதத்தைத் தூண்டினால் ஒரு பக்கம் இந்தியாவிடம் இருந்தும் மறு எல்லையில்ஆப்கானிஸ்தானிடமிருந்தும் பாகிஸ்தான் பிரச்சனைகளை சந்திக்கும். இதனால் இந்தப் படையினரை பாகிஸ்தான்எதிர்க்கிறது.
அதே அளவுக்கு இப் படையினரை இந்தியா தீவிரமாக ஆதரித்து வருகிறது.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரை தலிபான்களுடன் சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரும் தாக்கி வந்தனர்.இப்போது தலிபான்களை விட்டு பாகிஸ்தான் விலகிவிட்டதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் பாகிஸ்தான்அனுப்பிய படைகள் இன்னும் தலிபான்களுடன் தான் உள்ளனர்.
இவர்கள் ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் நிலை கொண்டுள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரைத் தாக்கிவருகின்றனர்.
இந்தப் படையினருக்கு ரஷ்யா ஆயுத உதவிகளை அளித்து வருகிறது. ஈரான் நிதியுதவி தருகிறது. இந்தியாஇவர்களுக்கு பிற உதவிகளைத் தந்து வருகிறது.
இந்தப் படையின் தலைவராக இருந்த அகமத் ஷா மசூத் தீவிர இந்திய ஆதரவாளராக இருந்தார். இவரை பின்லேடன் கும்பல் செப்டம்பர் 8ம் தேதி மனித வெடிகுண்டுகளை அனுப்பி கொலை செய்தது. இப்போது முகம்மத்பாகிம் என்பவர் இந்தப் படையைத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இவரையும் இந்தியா ஆதரித்து வருகிறது.
இந்தப் படையினர் புர்ஹானுதீன் ரப்பானியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ரப்பானியைத் தான் ஐக்கியநாடுகள் சபையும் இந்தியாவும் கூட ஆப்கானிஸ்தான் அதிபராக அங்கீகரித்துள்ளன.
ரப்பானியும் இந்திய ஆதரவாளர் தான். தீவிரமாக பாகிஸ்தான் எதிர்ப்பாளர்.
எனவே, இந்தப் படையினரின் ஆதரவையும் ரப்பானியின் ஆதரவையும் பெற்றவரைத் தான் அடுத்து ஆட்சியில்அமர்த்த வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.
இவர்கள் முன்னாள் ஆப்கானிஸ்தான் மன்னர் ஷகீர் ஷாவை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளராக ஏற்கத் தயாராகஉள்ளனர். எனவே, ஷகீர் ஷாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
எப்படியிருந்தாலும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு அமெரிக்கா முக்கியத்துவம் தர வேண்டும் எனஇந்தியாவும் ரஷ்யாவும் கோரி வருகின்றன.
இந்தியா வந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் இல்யா கிளபனோவும் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை துணைஅமைச்சரும் இது குறித்துத் தான் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்தினர்.
இன்று இந்தியா வரும் காலின் பாவலிடம் பிரதமர் வாஜ்பாய் இதனை வலியுறுத்துவார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications