சென்னையைப் பயமுறுத்திய புயல் கரையைக் கடந்தது
சென்னை:
சென்னையை பயமுறுத்திய புயல் சின்னம் நெல்லூர் அருகே கரையைக் கடந்து வலுவிழந்தது. இதனால்புயலிலிருந்து மீண்டும் சென்னை தப்பி விட்டது.
சென்னைக்கு அருகே புயல் சின்னம் ஏற்பட்டிருந்ததால் சென்னையில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கடும்மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நெல்லூர் மற்றும் ஓங்கோலுக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நெல்லூர் அருகே கரையைக் கடந்த புயல்வலுவிழந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட வட பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும்தென் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம்தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 100 மிமீ மழையும், மீனம்பாக்கத்தில் 50 மிமீ மழையும்பெய்துள்ளது.
சென்னை நகரில் பெய்துள்ள கன மழையால் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலஇடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து கீழே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications